திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரை சந்தித்த வணிகர் சங்கத்தினர்

சேலத்தில் நடந்த திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரை சந்தித்த நாமக்கல் மாவட்ட பேரமைப்பினர் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் வருகை குறித்த அழைப்பிதழை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையனிடம் , திமுக நாமக்கல் மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் அறிவுறுத்தலின்படி திமுக மாவட்ட அவைத் தலைவர் மணிமாறன் மற்றும் நாமக்கல் நகர்மன்ற துணை தலைவர் பூபதி ஆகியோர் வழங்கினர்.இத்தகவல் அனைத்து இணைப்பு சங்கத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று காலை சேலம் சென்னீஸ் கேட்வே ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், இணை செயலாளர் தேவி உதயக்குமார், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராயல் பத்மநாபன் ஆகியோர் திமுக மாநில மகளிர் அணி செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை சந்தித்து நன்றிகூறி கடிதம் அளித்தனர். அதில், ஒன்றிய அரசின் சார்பில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டி வணிகர்களுக்கு அழைப்பு விடுத்த குழுவுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும், பேரமைப்பின் இணைப்பு சங்கங்களாக செயல்படும் 45 சங்கங்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மாநில தலைவர் விக்கிரமராஜா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவர் மூலமாக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவிடம் நேரிடியாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story