குளித்தலை நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம்
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
குளித்தலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் பழைய கடைகள் அப்புறப்படுதப்பட்டு ரூ 14 கோடி செலவில் புதிய கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர், அதில் சிறு காய்கறி வியாபாரிகள் மற்றும் பழங்கள் விற்பனையாளர்கள் உட்பட ஏராளமான வியாபாரிகள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வந்தனர், இந்நிலையில் புதிய கடைகள் 35- பேருக்கு மட்டும் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீதி உள்ளவர்களவாழ்வாதாரம் இழந்து காணப்படுவதாக கூறியும், அப்பகுதியில் உள்ள குப்பை கொட்டப்பட்டுள்ள கூடோனை மாற்றி அந்த இடத்தை மற்ற வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் அனைத்து பகுதிகளையும் இணைத்து ஒரே சந்தையாக மாற்றகேட்டு வர்த்தகர்கள் ஆதரவுடன் இன்று வியாபாரிகள் திடீரென ஒய் எம் சி ஏ பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்து குழித்துறை நகராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைமற்றும் மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்கம் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் இணைந்து போராட்டத்தை வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தினர். போராட்டத்தி டேவிட்சன, ஜெகநாதன், கருங்கல் ஜார்ஜ், தினகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story