நகராட்சி மேற்பார்வையாளரை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்

நகராட்சி மேற்பார்வையாளரை கண்டித்து  வியாபாரிகள் சாலை மறியல்

சாலை மறியல் 

நடைபாதை காய்கறி வியாபாரிகளை அப்புறப்படுத்தி தராசு தட்டுகளை குப்பை வண்டியில் எடுத்துப் போட்ட திருப்பத்தூர் நகராட்சி மேற்பார்வை அலுவலரை கண்டித்து 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சக்தி நகர் பகுதியில் அண்ணா தினசரி புதிய காய்கறி மார்க்கெட் பொது நல சங்கம் நடத்தும் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட நடைபாதை காய்கறி வியாபாரிகள் தக்காளி வெங்காயம் பூண்டு கீரை வகைகள் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர். இதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பாகவே மத்திய அரசின் அடையாள அட்டை வழங்கி அதற்கான கடன் தொகையும் கொடுத்து வியாபாரம் செய்ய ஊக்குவித்து வரும் நிலையில் திடீரென நகராட்சி மேற்பார்வை அலுவலர் அப்துல் ரஹீம் நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தி அவர்களுடைய தராசு தட்டுகளை குப்பை வண்டியில் எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த நடைபாதை வியாபாரிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அறிந்து வந்த திருப்பத்தூர் நகர போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அப்புறப்படுத்தினர் இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு காணப்பட்டது.

Tags

Next Story