மனு கொடுக்க வந்த வியாபாரிகள் - எச்சரிக்கை செய்த ஆட்சியர்
மனு அளிக்க வந்த வியாபாரிகள்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, கோதண்ட ராமர் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வருகை தருகின்றனர் இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் சுற்றுலா பயணிகளின் வருகையை பயன்படுத்தி பல்வேறு விதமான வியாபாரங்களை செய்து வருகின்றனர்.
இது போன்று தனுஷ்கோடி பகுதிகளில் சாலையோர வியாபாரம் செய்வதற்காக மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கோரிக்கை மனு கொடுத்தனர் அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் கோரிக்கை மனுவை படித்துப் பார்க்காமல் தூக்கி எரிந்து இனிமேல் இப்பகுதிக்கு அனுமதி கேட்டு வந்தால் பிடித்து சிறையில் அடைத்து விடுவேன் என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தாராம் இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர் .
இதுகுறித்து செய்தியாளரிடம் கூறுகையில் நாங்கள் எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிறு சிறு சாலையோர வியாபாரங்கள் செய்வதற்கு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தோம் அதை வாங்கி படிக்க கூட இல்லாமல் இது போன்ற இனிமேல் வரக்கூடாது அனுமதி தர முடியாது என மனுவை பறித்து வீசியதால் மிகுந்த மன உளைச்சல் அடைந்தோம் மாவட்ட ஆட்சித் தலைவரை இதுபோன்று செய்தால் நாங்கள் யாரிடம் போய் மனு கொடுக்க முடியும் ஆகவே இதனை பரிசீலனை செய்து தனுஷ்கோடி பகுதியில் சிறு வியாபாரங்கள் செய்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் இல்லையேல் குடும்பத்தோடு சாவதை தவிர வேறு வழியில்லை என ஆதங்கத்தோடு தெரிவித்தனர்.