பொங்கல் கரும்பு வாங்க ஆர்வம் காட்டும் வியாபாரிகள்

பொங்கல் கரும்பு வாங்க ஆர்வம் காட்டும் வியாபாரிகள்

பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு நாமக்கல் சுற்றியுள்ள பகுதி விவசாயிகளிடம் கரும்புகளை வாங்க வியாபாரிகள் தீவிர ஆர்வம் காட்டுகின்றனர்.

பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு நாமக்கல் சுற்றியுள்ள பகுதி விவசாயிகளிடம் கரும்புகளை வாங்க வியாபாரிகள் தீவிர ஆர்வம் காட்டுகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள சமய சங்கிலி ,கலியனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது.. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி அறுவடை பணிகள் நடைபெறும். இங்கு விளைவிக்கப்படும் கரும்புகளை வாங்க வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து அதிகளவு வியாபாரிகள் வருகை தருகின்றனர்.

தற்போது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் ,பொங்கல் கரும்புகளை கொள்முதல் செய்வதற்காக ஆத்தூர் ,சேலம், ஈரோடு, நாமக்கல் ,திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் சமய சங்கிலிப் பகுதியில் முகாமிட்டு வருகின்றனர் ..காவிரி ஆற்று நீர் தாராளமாக கிடைப்பதினால் இங்கு விளைவிக்கப்படக்கூடிய கரும்புகள் மிகுந்த சுவை கொண்டதாகவும் சுமார் 8 அடி உயரம் வரை வளரக்கூடியதாக இருப்பதால் இந்த கரும்புகளை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.. சராசரியாக 400 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு 5000 ரூபாய் முதல் 9 ஆயிரம் ரூபாய் வரை கரும்பின் தரத்தை பொறுத்து விற்பனை நடைபெறுகிறது ...விவசாயிகளிடம் கரும்புகளை கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளனர்.

Tags

Next Story