செஞ்சி பஸ் நிலையத்தை திறக்க பேரூராட்சி தலைவரிடம் வியாபாரிகள் கோரிக்கை

செஞ்சி பஸ் நிலையத்தை திறக்க பேரூராட்சி தலைவரிடம் வியாபாரிகள் கோரிக்கை
செஞ்சி பஸ் நிலையத்தை திறக்க பேரூராட்சி தலைவரிடம் கோரிக்கை
செஞ்சி பஸ் நிலையத்தை திறக்க பேரூராட்சி தலைவரிடம் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகர வியாபாரிகள் செஞ்சி சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் சங்கர், செயலாளர் சுரேஷ், பொருளாளர் சீனிவாசன் உள்பட நூற் றுக்கும் மேற்பட்டோர் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தி யார் அலிமஸ்தானிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:- கடந்த 1½ ஆண்டுகளாக நடைபெற்று வந்த செஞ்சி பஸ் நிலைய விரிவாக்க பணிகள் கடந்த ஆகஸ்டு மாதம் முடிவடைந்தது. தீபாவ ளிக்கு முன்னதாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு பின்னர் விழா ஒத்திவைக்கப்பட்டு திறக்கப்படாதது அனைத்து வியாபாரிகள், ஊழியர்கள், பள்ளி மாணவர்கள்,

அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள் ளது. கடைகளுக்கான முன்வைப்பு தொகை மற்றும் மாத வாடகை கட்டணம் அதிகமாக உள்ள நிலையில் பஸ் நிலையம் செயல்பா டாத இந்த 12 ஆண்டுகளாக நிர்வாக செலவுகளை சமாளிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பெரும்பாலான வியாபாரிகள் கிறிஸ்துமஸ்,

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வியாபாரங்களை பெரிதும் நம்பி உள்ளதால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக பஸ் நிலையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி மன்ற தலைவர் இது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் துறை சார்ந்த அதிகாரிளுடன் கலந்தா லோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

Tags

Next Story