ஏரியில் அசுத்தமான கழிவு நீரில் கீரைகளை கழுவும் வியாபாரிகள்: சுகாதார ஆய்வாளர் எச்சரிக்கை

ஒசூர் அருகே ஏரியில் அசுத்தமான கழிவு நீரில் கீரைகளை கழுவும் வியாபாரிகள்: நோய் தொற்று‌ ஏற்படுத்தும் என எச்சரித்து சென்ற சுகாதார ஆய்வாளர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கொத்தமல்லி, புதினா , கீரைகள் என அதிகளவில் பயிரிடப்படுகிறது. பயிரிடபட்ட கீரைகள் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் , நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்த நிலையில் சூளகிரி - பேரிகை சாலையில் உள்ள துரை என்ற ஏரியில் கடந்தாண்டு சேமிக்கப்பட்ட கெலவரப்பள்ளி அணையின் உபரிநீர் தேங்கி, துர்நாற்றம் வீசும் வகையில் உள்ள அசுத்தமான ஏரி நீரில் கீரைகளை வியாபாரிகள் சுத்தம் செய்து பின்னர் வாகனங்கள் மூலம் விற்பனைக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்த துரை ஏரியில் நீர் துர்நாற்றம் வீசியும் , மீன்கள் செத்தும் மிதக்கின்றன இந்த அசுத்தமான நீரில் கீரைகளை வியாபாரிகள் சுத்தம் செய்து வரும் நிலையில், பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி சுகாதார ஆய்வாளர் தினேஷ்குமார் அவர்கள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது போன்ற அசுத்தமான நீரில் கீரைகளை கழுவினால் பொதுமக்களுக்கு பல நோய் தொற்று‌ அபாயம் ஏற்ப்பட்ட வாய்ப்பு உள்ளது எனவும் இது போன்ற நீரில் கீரைகளை சுத்தம் செய்திட கூடாது என அவர் எச்சரித்து அனுப்பினர்.

Tags

Read MoreRead Less
Next Story