கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ரூ.85.64 லட்சத்திற்கு வர்த்தகம்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ரூ.85.64 லட்சத்திற்கு வர்த்தகம்

விற்பனைக்கு வந்த தானியங்கள்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ரூ.85.64 லட்சத்திற்கு தானிய வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் விற்பனையானது.

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு, எள் 70 மூட்டை, மக்காச்சோளம் 330, வேர்க்கடலை 20, உளுந்து 2, தலா ஒரு மூட்டை கம்பு, பனிப்பயிர், வரகு, ஆமணக்கு உட்பட 956 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை எள் 11,037 ரூபாய், மக்காச்சோளம் 2,309, வேர்க்கடலை 7,539, உளுந்து 9,319, கம்பு 5,666, பனிப்பயிர் 7,509, வரகு 2,600, ஆமணக்கு 5,073 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.கமிட்டியில் மொத்தமாக 85 லட்சத்து 64 ஆயிரத்து 753 ரூபாய்க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.

சின்னசேலம் கமிட்டியில் எள் 26 மூட்டை, மக்காச்சோளம் 25 உட்பட 51 மூட்டை விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை எள் 10,179 ரூபாய், மக்காச்சோளம் 2,316 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 3 லட்சத்து 24 ஆயிரத்து 986 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தியாகதுருகம் கமிட்டியில் எள் 243 மூட்டை, நெல் 93, சோளம் 11, கம்பு 7, உளுந்து 2 மூட்டை உட்பட 356 மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக எள் 14,338 ரூபாய், நெல் 2,472, சோளம் 2,232, கம்பு 5,780, உளுந்து 9,219 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 28 லட்சத்து 10 ஆயிரத்து 220 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Tags

Next Story