கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.72.29 லட்சதிற்கு வர்த்தகம்

கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.72.29 லட்சதிற்கு வர்த்தகம்

விற்பனைக்கு வந்த விவசாய விளை பொருட்கள்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 72.29 லட்சம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் வர்த்தகம் நடந்தது.

கள்ளக்குறிச்சி மார்க்கெட் . கமிட்டிக்கு, எள் 600 மூட்டை, மக்காச்சோளம் 60, மணிலா 6, உளுந்து 5, ராகி 3, வரகு 2, தலா ஒரு மூட்டை நாட்டு கம்பு, கொள்ளு உட்பட 698 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு எள் மூட்டை 11,335, மக்காச்சோளம் 2,358, மணிலா 7,454, உளுந்து 7,949, ராகி 3,099, வரகு 2,869, நாட்டு கம்பு 4,266, கொள்ளு 4,899 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.

கமிட்டியில் மொத்தமாக ரூ.72 லட்சத்து 22 ஆயிரத்து 94க்கு நேற்று வர்த்தகம் நடந்தது. சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 22, எள் 10 என மொத்தம் 32 மூட்டை விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,336, எள் 8,546 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 830க்கு வர்த்தகம் நடந்தது.

Tags

Next Story