மாமல்லபுரத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்

மாமல்லபுரத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்

மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை சார்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை சார்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாமல்லபுரம் பல்லவர் கால சிற்ப பகுதியில், தொல்லியல் துறை சார்பில், நேற்று சர்வதேச பாரம்பரிய நாள் கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி, சிற்பங்களை காண சுற்றுலா பயணியருக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், இந்தியன் டிரெடிஷனல் ஆர்ட்ஸ் அன்ட் கல்ச்சுரல் அசோசியேஷன் மற்றும் மணிமேகலை இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்ட்ஸ் ஆகிய குழுவினர், மாலை, கடற்கரை கோவில் பகுதியில், பரதம், சிலம்பம், கோலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகள் நிகழ்த்தினர். நாட்டின் சரித்திரத்திற்கு சான்றாக விளங்கும் பாரம்பரிய நினைவுச் சின்னங்களின் முக்கியத்துவம், அவற்றை சிதைக்காமல் பாதுகாப்பது குறித்து, பயணியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, பொறியாளர் ஷேக் ஜீலானி பாஷா, மாமல்லபுரம் முதுநிலை பராமரிப்பு அலுவலர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story