ஓசூர் அருகே பாரம்பரிய எருதாட்ட விழா: சீறிப்பாய்ந்த காளைகள்

ஓசூர் அருகே பாரம்பரிய எருதாட்ட விழா: சீறிப்பாய்ந்த காளைகள்

ஓசூர் அருகே நடந்த பாரம்பரிய எருதாட்ட விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

ஓசூர் அருகே நடந்த பாரம்பரிய எருதாட்ட விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ஓசூர் அருகே உள்ள அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் இன்று பாரம்பரியமான எருதாட்ட விழா நடைபெற்றது.

ஓசூர் பகுதியில் பொங்கல் திருநாளுக்கு பின் பாரம்பரிய எருதாட்ட விழா பல்வேறு கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது அதைப்போல இன்று இந்த கிராமத்தில் நடைபெற்றது. இதற்காக கிராமத்தின் வெளியே மாடுகளை அவிழ்த்து விடவும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எழுதப்பட்ட விழாவை கண்டு ரசிக்கவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் கூட்டத்தின் நடுவே சீறிப்பாய்ந்து சென்றனர் அப்போது மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் மாடுகளின் கெம்புகளின் மேல் கட்டப்பட்டிருந்த தடுக்குகள் மற்றும் பரிசுப் பொருட்களை பறித்து தங்களது வீரத்தை நிலை நாட்டினர்.

இந்த பாரம்பரிய எருதாட்ட விழாவை காண சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் குவிந்தனர் எருதாட்டு விழாவின் போது மாடுகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர் அவர்களுக்கு ஓசூர் மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணிகளில் கெலமங்கலம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story