குத்தாலம் நடுநிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா
உணவு திருவிழாவில் கலந்து கொண்ட மாணவிகள்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படை மற்றும் நாகப்பட்டினம் இகோடோ சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பாக பாரம்பரிய உணவுத் திருவிழா நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார்.
பள்ளியின் இடைநிலை ஆசிரியர் பவித்ரா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பால் கொழுக்கட்டை,முடக்கற்றான் தோசை,உளுந்து களி, அரிசி மாவு கஞ்சி,பானகம்,கேழ்வரகு, கம்பு முதலிய சிறு தானியங்களினால் செய்யப்பட்ட உணவு வகைகள் மாணவ மாணவிகளால் காட்சிப்படுத்தப்பட்டன.
பாரம்பரிய உணவின் சிறப்பினை பற்றியும் சிறுதானிய உணவுகளை அன்றாட வாழ்வில் உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் உதவி தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் எடுத்து கூறினார்.பள்ளியின் மாணவ மாணவிகள் அனைவராலும் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்து உணவுகளையும் உண்டு மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளியின் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் செய்திருந்தார்.