காரப்பட்டு ஸ்ரீ மகாலட்சுமி நர்சரி பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா

காரப்பட்டு ஸ்ரீ மகாலட்சுமி நர்சரி பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா

உணவு திருவிழாவில் கலந்து கொண்டவர்கள்

புதுப்பாளையம் அடுத்த காரப்பட்டு ஸ்ரீ மகாலட்சுமி நர்சரி மற்றும் பிரைமரி தனியார் பள்ளியில் இயற்கை பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் இயற்கை பாரம்பரிய உணவு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழா பள்ளி தாளாளர் ச. சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் அ. ரேகா முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் செல்வதுரை அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி லட்சுமணன் என்கிற சீனு பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி இயற்கை பாரம்பரிய உணவு திருவிழாவை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சத்துமிகு சிறுதானியங்கள் , சிறுதானிய மருத்துவ குணங்கள் , இயற்கை வேளாண் உணவுகள் , இளநீர் பயன்கள் , திரவ உணவுகள் ,

சத்தான காய்கறி வகைகள் , உள்ளிட்ட பல்வேறு உணவுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது அப்போது பஞ்சாயத்து தலைவர் ஜெயந்தி லட்சுமணன் என்கிற சீனு பேசுகையில் மாணவர்கள் நீங்கள் படிப்பு மட்டுமல்லாமல் தங்களின் படைப்பாற்றல் மற்றும் ஆக்கத்திறன் ஆகியவற்றை தயக்கம் இன்றி வெளிப்படுத்த வேண்டும். மாணவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேலையாவது சத்துமிகு சிறு தானியங்களை உண்ண வேண்டும்.

சிறுதானிய உணவுகளை உட்கொள்வதால் நினைவாற்றல் அதிகரிக்கும். கண்பார்வை ஊக்குவிக்கும் . நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆகையால் அனைத்து மாணவர்களும் சிறுதானிய உணவுகளையும் சத்தான காய்கறி வகைகளும் . கீரை வகைகளும் உட்கொள்ள வேண்டும் என்று சிறப்புரை ஆற்றினார் .

மேலும் இந்நிகழ்ச்சியில் காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஊர் முக்கிய பிரமுகர்களும் பள்ளி அலுவலக பணியாளர்களும் இருபால் ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் மாணவர்களின் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story