பேராவூரணியில் பாரம்பரிய போர்க்கலை மீட்பு பயிற்சி

பேராவூரணியில் பாரம்பரிய போர்க்கலை மீட்பு பயிற்சி

பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் 

பேராவூரணியில், பாரம்பரிய போர்க்கலை மீட்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி நடைபெற்றது.

சோழநாடு கிராமப்புற விளையாட்டு அறக்கட்டளையின், பேராவூரணி, கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் சிவனாம்புஞ்சை தாய்மண் பாலம் ஆட்டச்சாலை இணைந்து நடத்திய பாரம்பரிய போர்க்கலை மீட்பு, செயல்முறை விளக்கப் பயிற்சி,

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, புதுடெல்லி காவல்துறை ஆணையர், ஐபிஎஸ் அலுவலர் ஆர்.சத்தியசுந்தரம் தலைமை வகித்தார். தாய் மண் பாலம் அமைப்பின் நிர்வாகி பாலமுருகன்,

பேராவூரணி பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகாலட்சுமி சதீஷ்குமார், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.ஏ.டி.சுந்தர்ராஜன், சோழநாடு கிராமப்புற விளையாட்டு அறக்கட்டளையின் நிர்வாகி சசிகலா நீலகண்டன், கௌரவத் தலைவர்கள் தென்னங்குடி ராஜா, கரம்பக்காடு குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பயிற்சியாளர்கள் கௌரி, அருண்குமார், முரளி மிதுன்,

பாலமுருகன் கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி மக்கள் தொடர்பு பாரதி ராமன், டாக்டர் மலையப்பன், ஹைடெக் சதீஷ், நீலகண்டன், தகவல் தொடர்பு நிர்வாகி கரம்பக்காடு தனரூபன், நிர்வாகி ஆலோசகர் தனுஷ் ராம்கிருஷ்ணன், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய போர்க்கலை மீட்பு குறித்த பயிற்சி, தாய்மண் பாலம் ஆட்டச்சாலை மாணவர்களைக் கொண்டு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பேராவூரணி பகுதி மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்முறை பயிற்சி வகுப்பு இலவசமாக தொடர்ந்து நடைபெற உள்ளது. முன்னதாக, பயிற்சியாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் எம்.சோலை நன்றி கூறினார்.

Tags

Next Story