பாரம்பரிய நெல் பயிர் விளைச்சல் போட்டி

மிட்டப்பள்ளியில் பாரம்பரிய நெல் பயிர் விளைச்சல் போட்டி நடக்கிறது.

மிட்டப்பள்ளியில் பாரம்பரிய நெல் பயிர் விளைச்சல் போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, மிட்டப்பள்ளி கிராமத்தில் மாநில அளவிலான பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., பாரம்பரிய நெல் பயிர் விளைச்சல் போட்டி நடந்தது. பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் மத்தியில் பரவலாக்கி சாகுபடியினை ஊக்கி வைக்கும் வகையில், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதுக்கான மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. பல வருடங்களாக பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் பயிர் செய்து வரும் மிட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தவஞானம் கருப்பு கவுனி, தூயமல்லி, காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா, கருங்குருவை, கருடன் சம்பா, மைசூர் மல்லி போன்ற பாரம்பரிய ரகங்களை பயிர் செய்து, விதை உற்பத்தி செய்து மற்ற விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.

இவர் தனது வயலில் கருப்பு கவுனி சாகுபடி செய்து மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிக்கு பதிவு செய்திருந்தார், போட்டிக்கான அறுவடை நேற்று நடந்தது. போட்டிக்கு, வேளாண்மை ஆணையர் பிரதிநிதியாக தர்மபுரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் அருள் வடிவு, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் சீனிவாசன். வேளாண்மை துணை இயக்குனர் அறிவழகன், மத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வானதி, ஊத்தங்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முனைவர் கருப்பையா, விவசாயிகளின் பிரதிநிதியாக பூபாலன் ஆகியோர் அடங்கிய நடுவர்கள் முன்னிலையில் அறுவடை நடந்தது. பயிர் விளைச்சல் போட்டி அறுவடை பணிகள் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.இதில், முன்னோடி விவசாயி வைத்தீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் பிரபாவதி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார், மற்றும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு அறுவடை பரிசோதனை பணியாளர் சுபாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story