சாலையில் வீழ்ந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு

சாலையில் வீழ்ந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு

சாலையில் வீழ்ந்த மரம் 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கனமழை காரணமாக வேரோடு சாய்ந்த புளியமரத்தால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவள்ளியில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

கெங்கவல்லி நடுவலூர், ஒதியத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. சூறை காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக நடுவலூர் ஊராட்சிக்குட்பட்ட ஆத்தூர் -கெங்கவல்லி சாலையில் பழமையான புளியமரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. அப்போது அவ்வழியே உயர் மின்னழுத்த கம்பிகள் மீது புளியமரம் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சாலையில் புளியமரம் விழுந்ததால் ஆத்தூர் கெங்கவல்லி சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வருவாய் துறையினால் மற்றும் காவல் துறையினர் புளிய மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகமின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின் சாலையில் இருந்த புளிய மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags

Next Story