வேரோடு சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு.
அத்திமாஞ்சாரிப் பேட்டை அருகே வேரோடு சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மிக்ஜாம் புயல் தாக்கம் திருவள்ளூர் மாவட்டத்தின் மீது தீவிர தாக்கம் காட்டி வருவதால் ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. திருத்தணி சுற்றுவட்டார் பகுதிகள் பொறுத்தவரை இன்று காலை முதல் தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு. நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றது. சாலைகள், குடியிருப்புகளுக்கு அருகில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிப்பட்டு-சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை திருவள்ளூர் மாவட்டம், அத்திமாஞ்சேரி பேட்டை அருகே அண்ணா நகர் சாலையில் இன்று மாலை திடீரென்று புளிய மரம் வேறுபாடு சாய்ந்தது. இதனால் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டதால் வாகன ஓட்டுகள் கடும் அவதிப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் கடந்தும் பிரதான சாலையில் சாய்ந்த மரத்தை அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்பட்டனர்.
இருப்பினும் பள்ளிப்பட்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையில் சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காததால் போக்குவரத்து கடுமையாக முடங்கியது. புயல் பாதிப்பு பகுதிகளில் உடனடியாக நிவாரண பணிகள் மேற்கொள்ள மெத்தனம் காட்டுவதாக குற்றம் சாட்டினர்.