மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

வீரகேரளம்புதூர் அருகே மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வீரகேரளம்புதூர் அருகே மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை செங்கோட்டை ரோட்டில் அருகே அரச மரம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் காலையில் பலத்த காற்று வீசி வந்தது. இந்நிலையில் சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த கனரக கன்டெய்னர் லாரி மரத்தின் கிளையை உடைத்து விட்டு சென்றது. இதனால் மரக்கிளை நடு ரோட்டில் விழுந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று நடுரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதைக் கண்ட அப்பகுதி வாகன ஓட்டிகள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story