நடு சாலையில் மரம் சாய்ந்து விழுந்தது

கனமழையின் காரணமாக நடு சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாக்கடை கால்வாய்களில் நீர் நிரம்பி வாகனங்கள் மூழ்கியது. மேலும் பள்ளிபாளையம், குமாரபாளையம் சாலை புதன் சந்தை என்ற பகுதியில் உணவகம் வெளியே சுமார் 10 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று நடுசாலையில் சாய்ந்து விழுந்தது.

மேலும் மரம் சாய்ந்ததின் காரணமாக அப்பகுதியில் இருந்த மின்சார வயர்கள் துண்டிப்பு ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது. மேலும் அகிலாண்டேஸ்வரி என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதி பலத்த மழையின் காரணமாக இடிந்து விழுந்தது.. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் யாருக்கும் இவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பினர் சாய்ந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே பெய்த கனமழையின் காரணமாக ,நகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தும், பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story