போக்குவரத்து விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை போக்குவரத்து விதிகளை மதிப்போம் என்பதை வலியுறுத்தி பொம்மலாட்டம் நிகழ்ச்சி குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக நடந்தது. பள்ளியின் தலைமையாசிரியர் . ஆடலரசு தலைமை வகித்தார். சிறப்பு விருந்திர்களாக வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் பங்கேற்றனர். பொம்மலாட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சீனிவாசன், செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு பொம்மலாட்ட கதைகள் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கூறினர். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பாவனை நடிப்பு மற்றும் நாடகம் நடத்தப்பட்டது. மாணவர்களிடையே கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், சால்வை அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டனர். மேலும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், ஆசிரியர் பெருமக்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.. இதற்கான ஏற்பாடுகளை என்.சி.சி அலுவலர் அந்தோணிசாமி, கவிராஜ் செய்தனர்.

Tags

Next Story