உத்திரமேரூர் அருகே தரைப்பாலத்தில் நீர் செல்வதால் போக்குவரத்திற்கு தடை

உத்திரமேரூர் அருகே தரைப்பாலத்தில் நீர் செல்வதால் போக்குவரத்திற்கு தடை

வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக்ஜம் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக உத்திரமேரூர் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்தது. காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கனமழை பெய்த நிலையில் காஞ்சிபுரத்தில் 18 மில்லி மீட்டர், உத்தரமேரூரில் 31 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 36 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 109 மில்லி மீட்டர், குன்றத்தூரில் 90 மில்லி மீட்டர், இதேபோல் செம்பரம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 113 மில்லி மீட்டர் என நேற்று பதிவாகியுள்ளது.

இதேபோல் மாவட்டத்தில் 19 கால்நடைகள் உயிரிழந்து உள்ளது. 25 வீடுகள் சேதம், பத்து மரங்கள் மற்றும் மூன்று மின் கம்பங்கள் சேதமடைந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த பொதுமக்களை மீட்டு 52 நிவாரண முகாம்களில் 1969 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டியாம்பந்தலில் இருந்து வேடந்தாங்கல், வெள்ளைபுத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள தரை பாலத்தின் மூழ்கி பாலத்தின் மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடந்து செல்ல முடியாத சூழலில் முள் செடிகளை வெட்டி போட்டு பொதுமக்கள் சாலை போக்குவரத்தை துண்டித்துள்ளனர். இதனால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த ஆண்டு இளைஞர் ஒருவர் தரைப்பாலத்தில் குளிக்க சென்றபோது சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story