தம்மம்பட்டி நகரப்பகுதியில் போக்குவரத்து மாற்றம்

தம்மம்பட்டி நகரப்பகுதியில் போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து மாற்றம் 

தம்மம்பட்டி நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்தில் மாற்றம் செய்து, தம்மம்பட்டி காவல்துறை அறிவித்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட்டத்தில், ஆத்தூரை அடுத்து பெரிய வணிகங்கள், தொழில்கள் நடைபெற்று வருவது, தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சியில்தான். இங்கிருந்து திருச்சி, துறையூர்,மதுரை,நாமக்கல், கரூர், பெரம்பலூர், கோவை, சென்னை, பெங்களூரு என நான்கு மார்க்கத்திலும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.தினமும், பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மிக அதிகளவில் நகரை கடந்து செல்கிறது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த, தம்மம்பட்டியின் பிரதான சாலைகளான கடைவீதி, நடுவீதியை நேற்று முதல், ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்து, தம்மம்பட்டி காவல் துறை அறிவித்துள்ளது.

Tags

Next Story