கரும்பு லோடு கட்டு அவிழ்ந்து சாலையில் கொட்டிய கரும்புகளால் போக்குவரத்து பாதிப்பு
கரும்பு லோடு கட்டு அவிழ்ந்து சாலையில் கொட்டிய கரும்புகளால் போக்குவரத்து பாதிப்பு
குமாரபாளையத்தில் கரும்பு லோடு கட்டு அவிழ்ந்து சாலையில் கொட்டிய கரும்புகளால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால், டிராக்டர் ஓட்டுனர் தப்பியோடினார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் நேற்று இரவு 08:30 மணியளவில், கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. பிரிவு சாலை பகுதியில் கரும்பு லோடு கட்டு அவிழ்ந்து, கரும்புகள் சாலையில் கொட்டின. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போது, டிராக்டர் ஓட்டுனர் யாரும் இல்லாதததும், அங்கிருந்து தப்பியோடிவிட்டதும் தெரிய வந்தது. கரும்புகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. டிராக்டர் உரிமையாளர் குறித்தும், விட்டுவிட்டு ஓடிய ஓட்டுனர் குறித்தும் குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story