டாரஸ் லாரிகள் அணிவகுப்பால் போக்குவரத்து பாதிப்பு 

டாரஸ் லாரிகள் அணிவகுப்பால் போக்குவரத்து பாதிப்பு 
சாலையில் டாரஸ் லாரிகள்
கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனையிடுவதால் சாலையின் இருபுறங்களிலும் டாரஸ் லாரிகள் அணிவகுத்து நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - திருநெல்வேலி மெயின் ரோட்டில் கனிம வளம் கொண்டு செல்லும் வாகனங்கள் தொடர்பான பிரச்சனையில் போலீசாரின் சோதனையால் விசுவாசபுரம் முதல் தோவாளை ஆற்றுப்பாலம் வரை தினமும் 200-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் நிறுத்தி சோதனை நடை பெற்று வருகின்றன. இதனால் சாலையின் இருபுறமும் டாரஸ் லாரிகள் வரிசையாக நடத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.மேலும் லாரி டிரைவர்கள் நாள் முழுவதும் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் உள்ளது.

இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், - மாவட்ட நிர்வாகம் ஒரேயடியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் கனிம வளங்கள் கொண்டுவரக் கூடாது என்று தடை விதித்தால் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். இல்லையென்றால் தேர்தல் அறிவிக்கும் வரை இந்த அவதி தொடர்வது, பொது மக்களை பெரும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது என்றனர்.

Tags

Next Story