சிறுதையூர்-செங்கரையூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சிறுதையூர்-செங்கரையூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து மாற்றம்

லால்குடி அருகே ரயில்வே கட்டுமான பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் அலகின் மூலம் திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா மணக்கால் சிறுதையூர் செங்கரையூர் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ரயில்வே மேம்பாலத்தின் அஸ்திவாரத்திற்காக அமைக்கக்கூடிய பைல்களின் தாங்கு திறன் சோதனை நடத்த வேண்டி உள்ளதால் சிறுதையூர் செங்கரையூர் சாலையில் லால்குடி ரவுண்டான முதல் கொப்பாவளி வரை பைல்களின் தாங்கத் திறன் சோதனை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. எனவே லால்குடியில் இருந்து அன்பில் செல்லும் மற்றும் திரும்ப வரும் அனைத்து வாகனங்களும் லால்குடி ரவுண்டானாவில் இருந்து சிறதூர் செங்கரையூர் சாலை வழியாக திருச்சி- சிதம்பரம் சாலை, பூவாளூர் -ஆலங்குடி சாலை மற்றும் காட்டூர் கரும்பு அபிவிருத்தி சாலை வழியாக கொப்பா வழி வழியாக செல்ல வேண்டும் இந்த போக்குவரத்து மாற்றம் மூன்று வார காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனவே பயணிகள் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்

Tags

Next Story