சாலையில் திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு

சாலையில் திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு

குமாரபாளையம் சாலையில் திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.


குமாரபாளையம் சாலையில் திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த சாலைகளில் மாடுகள், குதிரைகள் என கால்நடைகள் பல இடங்களில், சாலைகளின் நடுவில் செல்வதால், வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. சாலையில் நடந்தும், மற்றும் டூவீலர்களில் செல்லும் பொதுமக்களும் அச்சமடைந்து வருகிறார்கள். இது போல் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற கால்நடைகள் பறிமுதல் செய்து கோசாலைகளில் ஒப்படைக்க வேண்டும்.

Tags

Next Story