தருமபுரி உழவர்சந்தையில் போக்குவரத்து நெரிசல்

தருமபுரி உழவர்சந்தையில்  போக்குவரத்து நெரிசல்

சாலையை அடைத்து நிற்கும் பைக்குகள்

தர்மபுரி உழவர் சந்தையில் தினந்தோறும் விதிகளை மீறி சாலைகள் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறையின் கீழ் 5 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றது தினசரி தர்மபுரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் அத்தியாவசிய காய்கறிகள் பழங்கள் நேரடியாக விவசாயிகள் சாகுபடி செய்து உழவர் சந்தைகளில் வேளாண்மை துறையால் நிர்ணயம் செய்யப்படும் விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தர்மபுரி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலகம் எதிரே தருமபுரி உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றது. தினசரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் ஆயிரக்கணக்கான நுகர்வோர்கள் இங்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் தினசரி உழவர் சந்தை பகுதியில் இருசக்கர வாகனங்கள் சாலையில் விதிகளை மீறி நிறுத்தப்படுகிறது இதனால் காலை ஆறு மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பலமுறை உழவர் சந்தை நிர்வாகம் இது குறித்து நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு செய்தும் ஒரு சிலர் செய்யும் தவறால் தினசரி பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனை சரி செய்ய கோரி தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story