காங்கேயம் காவல் நிலையம் முன்பு போக்குவரத்து நெரிசல்

காங்கேயம் காவல் நிலையம் முன்பு அதிகாரிகள் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் காங்கயம் காவல் நிலையம்‌ அருகில் ரவுண்டானா சிக்னல் உள்ளது. இந்த ரவுண்டானா அருகே காங்கேயம் சட்டமன்ற அலுவலகம், காவல் நிலையம்,மகளீர் காவல் நிலையம் உள்ளது. குறுகிய சாலை என்பதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட காரணத்தினால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அகலப்படுத்தும் பணியும் நடைபெற்றது. போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சாலை என்பதால் விபத்து மற்றும் போக்குவரத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த நிலையில் தாராபுரம்-காங்கயம் சாலையில் வரும் வாகனங்கள் காங்கயம் ரவுண்டானா பகுதியில் போடப்படும் சிக்னல் காரணமாக காங்கயம் காவல் நிலையத்தின் முன்பே நிறுத்தப்படுவதும், குறுகிய சாலையில் காவல் நிலையத்தை கடந்தும் செல்கிறது. இந்த நிலையில் குறுகிய சாலை என்பதால் அடிக்கடி சிறு சிறு வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. மேலும் காவல்துறை அதிகாரிகளின் வாகனங்கள் சில சமயங்களில் காவல் நிலைய வாசலிலே நிறுத்தப்படுவதும், காவல் நிலையம் எதிரில் விபத்துக்குள்ளான வாகனங்களும் நிறுத்தப்படுகிறது. இதனால் கனரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் வாகன போக்குவரத்துக்கு இடையூராகவும், சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

எனவே உடனடியாக சாலையின் இரு ஓரங்களிலும் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story