பழனியில் போக்குவரத்து நெரிசல் - போலீசார் அலட்சியம்
போக்குவரத்து நெரிசல்
பழனி காந்தி மார்க்கெட் ரோடு மற்றும் அதை ஒட்டியுள்ள பழைய தாராபுரம் சாலை ஆகியவற்றில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக லாரி மற்றும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் நேரக்கட்டுப்பாடு இன்றி நினைத்த நேரத்தில் வந்து செல்வது மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
காந்திமார்க்கெட் இடிக்கப்பட்டபிறகு மளிகைக் கடைகள், இறைச்சிக்கடைகள் அனைத்தும் இந்த சாலையிலேயே இயங்குகிறது. இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து காவல்துறையும் கண்டு கொள்வதே இல்லை. போக்குவரத்து காவல்துறையினர் காலையும் மாலையும் இந்த சாலையில் கணகாணிப்பு செய்தால் போக்குவரத்து பிரச்சனை தீரும்.
Next Story