ராசிபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல்
கடும் போக்குவரத்து நெரிசல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முக்கிய சாலைகளான நாமக்கல் சாலை, ஆத்தூர் சாலை போன்ற பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இங்கே இயங்கி வரும். நிலையில் ராசிபுரத்தில் மாரியம்மன் கோவில் பண்டிகை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாலை வேலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அங்கே அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான கடைகளை பார்வையிட்டு பொருட்களை வாங்குவதற்காக சாலையில் ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டும் ,
மற்றும் கடையின் முன்பாக பல்வேறு வாகனங்களை நிறுத்தி செல்வதால் மாலை வேளையில் கூட்ட நெரிசல் அதிக அளவில் காணப்படுவதால் இதனால் நாமக்கல் சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுகிறது. மேலும் முகூர்த்த நாள் என்பதாலும் அதிக வாகனங்கள் இந்த பகுதியில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என போக்குவரத்து காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வாகனங்களை முறையாக அனுமதிக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் அவசர பணிகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்களும் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனமும் செல்ல இதனால் பாதிப்பு அடைவார்கள் எனவும் தெரிவித்தனர். இருப்பினும் போக்குவரத்து காவலர்கள் மாலை வேளையில் இப்பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் இப்பகுதியில் கடை அமைத்துள்ள வியாபாரிகளும், மற்றும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.