ராசிபுரம் கடைவீதி பகுதியில் போக்குவரத்து நெரிசல்

ராசிபுரம் கடைவீதி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம், கவரை தெரு, சின்ன கடைவீதி, பெரிய கடை வீதி ,பூக்கடை வீதி போன்ற பல்வேறு முக்கிய வீதிகளில் தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு பணிகளுக்காக இப்பகுதியில் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும் இந்தப் பகுதிகளில் தொடர்ந்து அதிகளவில் போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்படுவதால் இப்பகுதிக்குள் பொதுமக்கள் ,வாகன ஓட்டிகள் சென்றுவர மிகவும் கடினமாக உள்ளதாகவும், மேலும் அதிக சாலை ஆக்கிரமிப்பு மற்றும் கனரக வாகனங்கள் உள்ளே சென்று வருவதால் இருசக்கர வாகனங்களும், நடந்து செல்பவர்களும் இதனால் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்பகுதியில் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை எனவும், குறிப்பிட்ட நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் கனரக வாகனங்கள் உள்ளே வரக்கூடாது என கூறியிருந்த நிலையிலும் தொடர்ந்து இந்தப் பகுதியில் கனரக வாகனங்கள் அதிக அளவில் உள்ளே செல்வதாலும், ஆங்காங்கே உள்ள கடைகளில் பொருட்கள் இறக்க வேண்டும் எனக் கூறி சில மணி நேரம் பெரிய வாகனங்கள் உள்ளே நிற்பதால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவு ஏற்படுவதாகும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story