காங்கேயம் சாலையில் வாகன போக்குவர த்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

காங்கேயம் கரூர் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காங்கேயம் பகுதியில் பல்லடம் முதல் வெள்ளகோவில் வரை உள்ள சாலை அகலப்படுத்தும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. எனவே இருவழி சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்த நெடுஞ்சாலை இரண்டு ஓரங்களிலும் பறிக்கப்பட்டு வருகிறது. எனவே காங்கேயம்-கரூர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையின் நடுவே பாலங்கள் அமைப்பதற்கு பறிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் எதிரெதிர் திசையில் செல்லும் வகையில் திருப்பி விடப்படுகின்றன. இதனால் வாகனங்கள் அனைத்தும் எதிரெதிர் திசையில் ஒரே பாதையில் சென்று வருகிறது. கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பிரதான சாலையாகும். மேலும் அதிகமான வாகனங்கள் குறுகிய சாலையில் எதிரெதிர் திசையில் செல்வதால் போதுமான இடமில்லாமல் கனரக வாகனங்கள் செல்லும் பொழுது போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல கால தாமதமாகவும், கூட்ட நெரிசலாகவும் காணப்படுகிறது.

முக்கியமாக காலை 8 மணியிலிருந்து 10 மணி வரையிலும் மற்றும் மாலை 4 மணியிலிருந்து இரவு சுமார் 10 மணி வரையிலும் போக்குவரத்து அதிகமாக இருப்பதனால் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. மேலும் மக்கள் கோவை - திருச்சி சாலையில் காங்கேயம் ரவுண்டானா பகுதியில் இருந்து வெள்ளகோவில் வரையிலும் கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.‌ எனவே சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும்,

விபத்துகள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு‌ பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story