சேலத்தில் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல்

சேலம் மாநகரில் இருந்து புதிய பேருந்து நிலையம், ஜங்ஷன் மற்றும் ஓமலூர் செல்லும் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொதுமக்கள் தற்போதே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி விடுமுறை தினமான இன்று சேலம் 4 ரோடு சந்திப்பு அருகே உள்ள போத்தீஸ் துணிக்கடையில் புத்தாடைகளை வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

மேலும் அதிக எண்ணிக்கையிலான கார்களில் பொதுமக்கள் போத்தீஸ்க்கு படையெடுத்ததால் சேலம் மாநகரில் இருந்து புதிய பேருந்து நிலையம், ஜங்ஷன் மற்றும் ஓமலூர் செல்லும் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் அவ்வழியே சென்ற இருச்சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஊர்ந்து சென்றது. போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய வேண்டிய காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Next Story