வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி போக்குவரத்து காவல் துறை விழிப்புணர்வு

காங்கேயம் போக்குவரத்து காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தும், காரில் சீட் பெல்ட் அணிந்தும் வந்தவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து இனிப்புகள் வழங்கி கௌரவித்தனர்.

காங்கயத்தில் போக்குவரத்து விதிகளை பின்பற்றும் வகையிலும், சாலை விபத்தை தவிர்க்கும் வகையி லும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்கள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ரோட்டரி சங்கம் மற்றும் சமூக ஆர்வலர் சுல்தான் பேட்டை வள்ளி கனகராஜ் ஆகியோர் தலைமையில் இனிப்புகளை வழங்கினர்.

இதனை தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனத்தை ஓட்டி வருபவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், சாலை விபத்துகளை குறைக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் மேலும் உயிரிழப்பு நம்மை மட்டுமல்ல நமது குடும்பத்தினரையும் பெரிதும் பாதிக்கும் எனவும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது எனவும், வாகன ஓட்டிகள் அனைத்து உரிமங்களையும் வைத்திருக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

நெடுஞ்சாலை மற்றும் சிக்னல்களில் வெயிலில் பொதுமக்களுக்காக உழைக்கும் சுமார் 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்களின் தாகத்தை குறைக்கும் வகையில் இளநீர் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி மரியாதை செலுத்தினர். மேலும் காங்கயம் ரவுண் டானா, கரூர் சாலை, பஸ்நிலையம் ஆகிய இடங்க ளிலும் இது போன்று வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கபட்டது. இதில் போக்குவரத்து போலீசார், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story