போக்குவரத்து ஓய்வு பெற்றோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

போக்குவரத்து ஓய்வு பெற்றோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

ஆர்பாட்டம் 

தஞ்சாவூரில் போக்குவரத்து ஓய்வு பெற்றோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நூற்றுமூன்று மாத கால அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். 2022 டிசம்பர் முதலான பலன்களை வழங்க வேண்டும். ஒப்பந்த முறை பணி நியமனத்தை கைவிட வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். இதர துறைகளைப் போல மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்.

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், தஞ்சாவூர் விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வியாழக்கிழமை காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தஞ்சை மாவட்டச் செயலாளர் எஸ்.ஞானசேகரன் தலைமை வகித்தார்.

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி என்.கண்ணன் வரவேற்றார். சிஐடியு விரைவு போக்குவரத்துக் கழக மாநில துணைத்தலைவர் பி. வெங்கடேசன் துவக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சா.செங்குட்டுவன் வாழ்த்திப் பேசினார். அரசுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தஞ்சை கிளைச் செயலாளர் பாஸ்கரன், அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தஞ்சை கிளைத் தலைவர் கார்த்திகேயன், மூத்த தோழர் தூயமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிறைவாக விரைவு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தஞ்சை கிளை பொருளாளர் கே.பத்மநாபன் நன்றி கூறினார்.

Tags

Next Story