போக்குவரத்து விதிமீறல்... நான்கு மாதங்களில் 3.62 கோடி ரூபாய் வசூல்

போக்குவரத்து விதிமீறல்... நான்கு மாதங்களில் 3.62 கோடி ரூபாய் வசூல்

மதுரையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 4 மாதங்களில் ரூ.3.62 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

மதுரையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 4 மாதங்களில் ரூ.3.62 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரில் 4 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,31,902 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3 கோடியே 62 லட்சத்து 87 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து வழக்கறிஞர் முத்துக்குமாருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அளித்துள்ள பதில்: கடந்த ஜூன் முதல் அக்.,வரை வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 1.25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2.39 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

போதையில் வாகனங்கள் ஓட்டியதற்காக 3719 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1.17 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.சீட் பெல்ட் அணியாமல்ஓட்டியதற்காக 2597 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.11.29 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில் போதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீதான பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அபராத தொகை வசூலாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story