தேசிய வங்கியில் பணியாற்றிய நபருக்கு நேர்ந்த சோகம்
சங்ககிரி அருகே தேவூர் தேசிய வங்கியில் பணியாற்றி நபருக்கு நேர்ந்த சோகம்
சங்ககிரி அருகே தேவூர் தேசிய வங்கியில் பணியாற்றி நபருக்கு நேர்ந்த சோகம்
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் அருகேயுள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த யுவராஜ் (33) இவர் தேவூரில் தேசிய வங்கியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார் .இவருக்கு திருமணமாகி சண்முகபிரியா(27) என்ற மனைவியும் வைஷ்ணிகா(4) மகளும் உள்ளனர், இந்நிலையில் யுவராஜ் கடந்த சில ஆண்டுகளாக மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது குடித்து வந்துள்ளார், இந்நிலையில் கடந்த 7மாதங்களுக்கு முன்பு யுவராஜ் மது போதையில் மோட்டார் சைக்கிளில் சென்று தானாக கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வந்தார் , வீட்டிற்கு வந்து சில நாட்களிலேயே மீண்டும் மது குடிக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது, இதனையடுத்து குடும்பத்தினர் யுவராஜ்யை அழைத்து சென்று சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர், பரிசோதனை செய்த மருத்துவர்கள் இனி மது குடிக்க கூடாது இதற்கு மேல் மது குடித்தால் உயிர்க்கு ஆபத்து என கூறியுள்ளனர், வீட்டிற்கு வந்த யுவராஜ் மீண்டும் மது குடிக்காமல் என்னால் இருக்க முடியாது குடியை விட்டு மீள முடியாமல் மது குடிக்க ஆங்காங்கே நண்பர்களிடம் பணம் கடன் வாங்கி மது குடித்துள்ளார், குடும்பத்தினர் நண்பர்கள் குடியை விட சொல்லியும் கேட்காமல் வழக்கம் போல அதிகளவில் குடித்து வந்துள்ளார் , இதனையடுத்து கடந்த 30ந் சனிக்கிழமை இரவு யுவராஜின் மாமா வீட்டிற்கு அவரது அம்மா பூரணிமனைவி சண்முகபிரியா ஆகியோர் அழைத்து சென்று உறவினர்கள் மூலம் அறிவுரை கூறியுள்ளனர், இதனையடுத்து தூங்க செல்வதாக வீட்டிற்கு போதையில் சென்ற யுவராஜ் வீட்டில் சேலையால் தூக்கிட்டு தொடங்கியுள்ளார் .இதனைபார்த்த குடும்பத்தினர் பவானி தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர் இதனையடுத்து தேவூர் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.இச்சவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags
Next Story