புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்

புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்

சங்ககிரி அருகே திருமணம் நடந்த 15 நாட்களில் புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சங்ககிரி அருகே திருமணம் நடந்த 15 நாட்களில் புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட நல்லங்கியூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் இந்திராணி தம்பதியினருக்கு 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் 3வது இளைய மகன் இளவரசன் என்கிற கீர்த்தி (21) கொட்டாயூர் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15நாட்களுக்கு முன்பு இளவரசன் சேலம் பகுதியில் அவரது உறவினரான ரத்தினம் மகள் திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து ரத்தினம் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையெடுத்து காதல் ஜோடிகளான இளவரசனும் திவ்யாவும் கருப்பூர் காவல் நிலையத்தில் ஆஜரானார்கள் அங்கு திவ்யாவின் பெற்றோர்கள் இருவரின் திருமனத்தை முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டு சான்றிதழ்களை கொடுக்குமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர்.

இதனால் மனமுடைந்த இளவரசன் தனது வீட்டில் விவசாயத்திற்கு வைத்திருந்த களை கொல்லி மருந்தை குடித்துள்ளார். உடனடியாக உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த இளவரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சங்ககிரி அருகே 15 நாட்களில் புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story