சேலத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம் !

சேலத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம் !

தற்கொலை

சேலத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் குளியலறையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துக்கொண்டார்.

சேலம் மணியனூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். வெள்ளி பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி வினிதா (வயது 24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சிக்கு செல்வது தொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வினிதா மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. பின்னர் சுரேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் குளியலறை உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. நீண்ட நேரம் தட்டி பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை.

கதவை உடைத்து உள்ளே பார்த்த போது சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார். அங்கு இருந்த ஷவர் கம்பியில் அயர்ன் பாக்ஸ் ஒயர் மூலம் தூக்கில் தொங்கிய நிலையில் வினிதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வினிதா பரிதாபமாக இறந்துள்ளார். இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த வினிதாவுக்கு 3 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story