விடமுடியாத குடிப்பழக்கத்தால் விபரீதம் - மனைவியை கொன்று கணவன் தற்கொலை

விடமுடியாத குடிப்பழக்கத்தால் விபரீதம் - மனைவியை கொன்று கணவன் தற்கொலை

செல்வராஜ்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதி ரைஸ் மில் அருகில் வசிப்பவர் செல்வராஜ்(45). லாரி ஓட்டுநர், இவரது மனைவி ராஜாமணி(40) இவர் கூலி வேலை செய்து வந்தார்.இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆன நிலையில், இவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். வழக்கம் போல் செல்வராஜ் லாரி ஓட்டுநர் பணி முடித்து விட்டு குடி போதையில் வீட்டிற்கு வந்து உள்ளார் அப்போது, மனைவியுடன் வழக்கம் போல் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது,போதை மயக்கத்தில் மனைவின் உடலில் கத்தியால் ஆகங்காகே குத்தி விட்டு பின்னர்,மனைவியின் உடலில் இருந்த புடவையால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தானும் விசம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நீண்ட நேரம் வெளிய வரதாதால் அருகில் இருப்பவர்கள் சென்று பார்க்கும் போது இறந்த கிடபதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்களபுரம் காவல் துறையினர் இரு பிரேதங்களையும் கைப்பற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தொடர்ந்து, காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.


Tags

Next Story