சேலத்தில் பரிதாபம் : பஸ் சக்கரத்தில் சிக்கி கார் டிரைவர் பலி

சேலத்தில் பரிதாபம் : பஸ் சக்கரத்தில் சிக்கி கார் டிரைவர் பலி

சாலை விபத்து

சேலத்தில் பேருந்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் வந்தவர் உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் மல்லாபுரம் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகன் யுவராஜ் (வயது 20). இவர் சேலத்தில் ஒருவரிடம் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் உடையாப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பஸ்சை அவர் முந்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அந்த வழியாக எதிரே 2 பேர் வேறு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இதை பார்த்த யுவராஜ் மோட்டார் சைக்கிளை எங்கு திருப்புவது என்று தெரியாமல் தடுமாறினார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் இவரது மோட்டார் சைக்கிள் தனியார் பஸ் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறி அவர் சாலையில் விழுந்தார். அப்போது பஸ்சின் பின் சக்கரம் யுவராஜின் தலை மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் இறந்த யுவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story