தஞ்சையில் பரிதாபம்: தீ விபத்தில் பசுமாடு பலி

தஞ்சையில் பரிதாபம்: தீ விபத்தில் பசுமாடு பலி

பலியான பசுமாடு

தஞ்சையில் தீ விபத்தில் பசுமாடு பலி பலியானது.

தஞ்சை அருகே உள்ள குருங்களூரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவாசகம் (வயது 58). இவர் தனது வீட்டில் பின்புறம் கொட்டகை அமைத்து மாடுகளை பராமரித்து வருகிறார். அருகிலேயே வைக்கோல் கட்டுகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த பசுமாடுகள் சத்தமிட்டதை கண்டு மாணிக்கவாசகம் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, அங்கிருந்து வைக்கோல் போர் தீயில் எரிந்து கொண்டிருந்தது. வெப்பம் தாளாமல் பசுமாடுகள் கத்திக் கொண்டிருந்தன.

இதை அடுத்து மாடுகளை அவிழ்த்து விட்டு தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருந்தாலும் தீ அதிகம் பற்றியதால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து, தஞ்சை தீயணைப்பு துறையினர் வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

இந்த தீ விபத்தில் ஒரு பசுமாடு பலியானது. இரண்டு பசு மாடுகள் காயமடைந்தன. மேலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 450 வைக்கோல் கட்டுகளும் கருகி நாசமாகின. இது குறித்து தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் மாணிக்கவாசகம் புகார் அளித்தார். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து எதேச்சையாக நடந்ததா அல்லது சதி வேலை காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Tags

Next Story