லாரி மீது கார் மோதி விபத்து கபடி வீரர் பலியான சோகம்

லாரி மீது கார் மோதி விபத்து கபடி வீரர் பலியான சோகம்

சங்ககிரியில் முன்னாள் சென்ற லாரி மீது சொகுசு கார் மோதி கபடி வீரர் ஒருவர் பலியானார்.


சங்ககிரியில் முன்னாள் சென்ற லாரி மீது சொகுசு கார் மோதி கபடி வீரர் ஒருவர் பலியானார்.
சேலம் மாவட்டம் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு... இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.... சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே எர்ணாபுரம் நம்பியாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்குமார் (23),கபடி வீரரான இவர் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களான கார்த்திக்(29), சிவலிங்கம்(23) ஆகியோருடன் சொகுசு காரில் மகுடஞ்சாவடியிலிருந்து சங்ககிரி நோக்கி வைகுந்தம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் முன் பக்கத்தில் அமர்ந்து சென்ற சுபாஷ்குமார் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காரை ஓட்டிச் சென்ற கார்த்திக், மற்றும் சிவலிங்கம் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து சென்ற சங்ககிரி போலீசார் சடலம் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயம் அடைந்த இளைஞர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பம் குறித்து வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Read MoreRead Less
Next Story