ரயிலில் அடிப்பட்டு தாய், மகள் பலியான சோகம்

ரயிலில் அடிப்பட்டு தாய், மகள் பலியான சோகம்
சிவகாசி அருகே ரயிலில் அடிப்பட்டு தாய்,மகள் பலியான சோகம்....
சிவகாசி அருகே ரயிலில் அடிப்பட்டு தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர்.

சிவகாசியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற தாய், மகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு... விருதுநகர் மாவட்டம், சிவகாசி காந்தி நகரை சேர்ந்தவர் கணேசன்.இவரது மனைவி தமிழ்ச்செல்வி(54). இவர்களது மகள் தனலட்சுமி(28) திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். தமிழ்ச்செல்வி வாய் பேச முடியாத,காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார்.

இன்று காலை தமிழ்ச்செல்வி, தனலட்சுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக ரயில் பாதையை கடந்து சென்றுள்ளனர். அப்போது தமிழ்ச்செல்வி ரயில் தண்டவாளத்தில் நடந்து வந்துள்ளார். அப்போது மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி சென்ற பயணிகள் ரயில் சாட்சியார்புரம் ரயில்வே அருகே வருவதை கண்ட மகள் தனலட்சுமி, தாய் தமிழ்ச்செல்வியை காப்பாற்ற முயன்ற போது ரயிலில் அடிபட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இறந்தவர்களின் உடலை மீட்டு சிவகாசி அரசு ம்ருத்துவமனை உடற்கூர்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ஶ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story