பெரியகுளத்தில் திருமண நாளில் சோகம்: வாலிபர் தற்கொலை

பெரியகுளத்தில் திருமண நாளில் சோகம்: வாலிபர் தற்கொலை

காவல் நிலையம் 

பெரியகுளத்தில் திருமண நாளில் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் நாகேந்திர குமார். இவரது மனைவி நந்தினிக்கும் இவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்று இவர்களுக்கு திருமண நாள் என்பதால் கணவன் மனைவியாக கோவிலுக்கு சென்று வந்தவர்கள் தாங்கள் நடத்தும் மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று பணி செய்து கொண்டிருந்தனர்.

இடையில் நாகேந்திர குமார் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் வீட்டில் இருந்து தான் சாக போவதாக மனைவிக்கு போன் செய்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரியகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story