மது அருந்தியதை கண்டித்ததால் விபரீதம் - ஸ்வீட் கடை அதிபர் வெட்டி கொலை
போலீசார் விசாரணை
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே ராஜா ஸ்வீட்ஸ் என்ற பெயரில் ஸ்வீட் கடையை குருசாமிராஜா என்பவர் துவங்கிய ஸ்வீட் கடை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.இந்த கடையை துவங்கிய குருசாமி ராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காலமானர் அவரது மகன் சிவக்குமார் (43) ஸ்வீட் கடை மற்றும் குருசாமி ராஜா நடத்தி விஜய் குரு என்ற டிரஸ்ட்டையும் கவனித்து வருகிறார். இந்த நிலையில் சிவக்குமார், தனது இரண்டவது மனைவி காளீஸ்வரி (23) மகன் குருசரன் (2) ஆகியோருடன் இராஜபாளையம் தெற்கு வெங்கநல்லூர் பஞ்சாயத்து உட்பட்ட இ எஸ் ஐ காலனி பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தை பார்ப்பதற்காக சென்று உள்ளனர் அப்பொழுது நான்கு பேர் அங்கு மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், அவர்களை இங்கு மது அருந்தக்கூடாது என சிவக்குமார் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நான்கு பேரும் சேர்ந்து சிவக்குமாரை அரிவாளால் வெட்டியும் மற்றும் கத்தியால் கழுத்தில் குத்தியும் கைப்பகுதியில் வெட்டியும் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து சிவக்குமார் மனைவி காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலைச் சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரீத்தி தலைமையில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர் .இந்த தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் சம்பவ இடத்தை பார்வையிட்டு குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார் மேலும் கொலை செய்யப்பட்ட.சிவக்குமார் அவரது சமுதாயத்தில் முதல் திருமணம் செய்து அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளதாகவும், தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது தனது ஸ்வீட் கடைக்கு வேலைக்கு வந்த காளீஸ்வரி என்ற பெண்ணிடம் சிவகுமாருக்கு தொடர்பு ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த கொலை சம்பவம் சொத்துக்காக நடந்ததா அல்லது முன் விரோதம் காரணமா நடந்ததா? அல்லது வேறு எதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.