முத்தூரில் பழுது பார்க்கும் போது சோகம்: சக்கரம் ஏறி உரிமையாளர் பலி
பலியானவர்
முத்தூரில் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது டிராக்டர் சக்கரம் தலையில் ஏறி டிராக்டர் ஒர்க் ஷாப் உரிமையாளர் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
திருப்பூர் மாவட்டம் முத்தூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (59) டிராக்டர் பழுது பார்க்கும் நிறுவனம் வைத்து நடத்தி வருகின்றார். இவர் நேற்று தனது நிறுவனத்தில் டிராக்டர் ஒன்றின் அடியில் படுத்து பழுது பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக டிராக்டர் நகர்ந்து சண்முகசுந்தரத்தின் தலையில் மேலே ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சண்முகம் தலை நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்து ஊழியர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சண்முகசுந்தரத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது விபத்து குறித்து புகாரின் பேரில் வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story