கொல்லிமலையில் வழிதட பாதை: ரூ. 3 லட்சம் அபராதம் விதிப்பு

கொல்லிமலையில் வழிதட பாதை: ரூ. 3 லட்சம் அபராதம் விதிப்பு
பாதை அமைத்த இடம்
கொல்லிமலை வனப்பகுதியில் வழிதட பாதை அமைத்த 3 நபர்களுக்கு வனத்துறையினர் ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படுள்ளது.

சேந்தமங்கலம், டிச. 8 கொல்லிமலை வனப்பகுதியில் அரசு அனுமதியின்றி வழிதட பாதை அமைத்த அப்பகுதி கிராமத்தை சேர்ந்த 3 நபர்களுக்கு தல ஒரு லட்சம் வீதம் ரூ. 3 லட்சம் அபராதம் வனத்துறையினர் விதித்தனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை யூனியனுக்கு உட்பட்ட குண்டூர் நாடு பஞ்., பள்ளிக்காட்டுப்பட்டி பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் அப்பகுதி பழங்குடியின மக்கள் வழிதட பாதை அமைத்து வருவதாக மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது,

தொடர்ந்து நாமக்கல் வனசரகர் பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வனக்குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிக்காட்டுப்பட்டி வனப்பகுதியில் இருந்து சுக்கலாம்பட்டி பகுதிக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு அரசு அனுமதியின்றி வழிதட பாதை அமைத்து விரிவக்கம் செய்து சீரமைக்கப்பட்டு, அங்கிருந்து தம்மம்பட்டி விவசாய பொருட்களை பழங்குடியின மக்கள் கொண்டு செல்வதற்காக வழிதட பாதை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

வனத்துறையினர் அனுமதியின்றி வனப்பகுதியில் வழிதட பாதை அமைத்த குண்டூ நாடு பஞ்., பள்ளிக்காட்டுப்பட்டியை சேர்ந்த செல்வம். 35, செல்வராஜ். 53, பொன்னுசாமி, 45 ஆகிய 3 நபர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ரூ. 3 லட்சம் அபராதம் வனத்துறையினர் விதித்தனர். மேலும் வனப்பகுதியில் வனத்துறை அனுமதியின்றி எவ்வித பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என வனத்துறையினர் அறிவுருத்தியுள்ளனர்.

Tags

Next Story