ரயிலில் நகை திருட்டு வழக்கு - மேற்கு காவல் நிலையத்திற்கு மாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனியைச் சார்ந்தவர் செண்பகவல்லி. இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து ரயிலில் விருதுநகர் வந்ததாக கூறப்படுகிறது. இவர் தூத்துக்குடியில் தனது வீட்டில் இருந்து கிளம்பும்போது சுமார் 2 லட்சம் மதிப்புள்ள நகைகளை தனது கைப்பையில் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மணியாச்சி ரயில் நிலையத்தில் கைப்பையை பார்த்த பொழுது அதில் நகைகள் இருந்ததாகவும் அதைத்தொடர்ந்து விருதுநகர் ரயில் நிலையம் இறங்கிய அவர் பிஎஸ்என்எல் கோட்டரேஸ் வந்து பார்த்தபோது பேக்கில் இருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் இது தொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விருதுநகர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ரயில்வே காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் அதைத் தொடர்ந்து தொடர் விசாரணைக்காக ரயில்வே கூடுதல் காவல் துறை இயக்குனர் உத்தரவின் பெயரில் இந்த வழக்கு தற்போது கூடுதல் விசாரணைக்காக மேற்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது .மேற்கு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.