திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி வாலிபர் சங்கத்தினர் ரயில் மறியல்

திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய வாலிபர் சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் குமரன் சிலை அருகே ஒன்று கூடிய வாலிபர் சங்கத்தினர், பதாகைகளை ஏந்தியபடி, அங்கிருந்து பேரணியாக சென்று திருப்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அருள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான விதிகளை, ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

அதில் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. குறிப்பாக விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சட்டம் நிறைவேறி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், இத்தனை ஆண்டுகள் அமல்படுத்தாத சட்டம் திடீரென நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் கோடிக்கணக்கில் நன்கொடை பெற்றதை திசை திருப்பவே இந்த முயற்சியை ஒன்றிய மோடி அரசு செய்துள்ளது.

அப்பட்டமாக இந்து முஸ்லீம் என மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வாக்குகள் பெறும் முயற்சி என கூறி முழக்கங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து ரயில் மறியல் ஈடுபட முயற்சி செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டத்தில்வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கே.பாலமுரளி, மாவட்ட நிர்வாகிகள் விவேக், ராம்கி, பாலசுப்பிரமணி, சிந்தன், சந்தோஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story